நிறையழிதல்
1260நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போ மெனல்.

நெருப்பிலிட்ட   கொழுப்பைப்     போல்      உருகிடும்   நெஞ்சம்
உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில்     உறுதியாக
இருக்க முடியுமா?.