அடக்கமுடைமை
127யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

ஒருவர்  எதைக்  காத்திட  முடியாவிட்டாலும்  நாவையாவது அடக்கிக்
காத்திட  வேண்டும்.  இல்லையேல்   அவர்  சொன்ன  சொல்லே  அவர்
துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.