குறிப்பறிவுறுத்தல்
1279தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு  காரணமாகக்   கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்
கூடிய மென்மையான தோளையும்   நோக்கியவள்  காதலனைத் தொடர்ந்து
செல்வதென்ற    முடிவைத்    தன்   அடிகளை   நோக்கும்   குறிப்பால்
உணர்த்தினான்.