அடக்கமுடைமை
128ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்.

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும்  சொற்களில்   ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும்,  அந்தப்   பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.