புணர்ச்சிவிதும்பல்
1287உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில்
குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப்  புரிந்திருந்தும்,   ஊடல்
கொள்வதால் பயன் என்ன?