புணர்ச்சிவிதும்பல்
1288இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம்   கவர்ந்த    கள்வனே! இழிவு தரக் கூடிய துன்பத்தை நீ
எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும்  மேலும்
அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச்
செய்கிறது உன் மார்பு.