அடக்கமுடைமை
129தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.

நெருப்பு  சுட்ட  புண்கூட  ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு
திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.