நெஞ்சொடுபுலத்தல்
1291அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.

நெஞ்சே! நம்மை   நினைக்காமல்  இருப்பதற்கு   அவருடைய நெஞ்சு
அவருக்குத்    துணையாக   இருக்கும்   போது  நீ எமக்குத் துணையாக
இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?