நெஞ்சொடுபுலத்தல்
1298எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திறம்
உள்ளு முயிர்க்காத னெஞ்சு.

பிரிந்து   சென்ற  காதலரை  இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால்,
அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக்
கொண்டிருக்கும்.