புலவி
1307ஊடலி ணுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது தன்றுகொ லொன்று.

கூடி  முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து
விடுமோ  என  எண்ணுவதால்  ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு
உண்டு.