புலவிநுணுக்கம்
1316உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப்
புல்லாள் புலத்தக் கனள்.

"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான்  தாமதம்."
"அப்படியானால்   நீர்   என்னை   மறந்திருந்தால்தானே  நினைத்திருக்க
முடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள்.