புலவிநுணுக்கம்
1318தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ளல்
எம்மை மறைத்திரோ வென்று.

ஊடல்    கொள்வாளோ  எனப்     பயந்து நான் தும்மலை அடக்கிக்
கொள்வதைப்   பார்த்த    அவள் "ஓ" உமக்கு  நெருங்கியவர்   உம்மை
நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள்.