ஊடலுவகை
1328ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய உப்பு.

நெற்றியில்   வியர்வை   அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை,
மீண்டும்    ஒருமுறை    ஊடல்   தோன்றினால்,   அதன்   வாயிலாகப்
பெறமுடியுமல்லவா?