ஊடலுவகை
1329ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா.

ஒளி   முகத்தழகி    ஊடல்   புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும்
பொருட்டு   நான்   அவளிடம்  இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு
இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.