பிறனில் விழையாமை
141பிறன்பொருளாட் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

பிறன்  மனைவியிடத்து    விருப்பம்   கொள்ளும் அறியாமை, உலகில்
அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து   உணர்ந்தவர்களிடம்
இல்லை.