பிறனில் விழையாமை
148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.

வேறொருவன்    மனைவியைக்   காம   எண்ணத்துடன்   நோக்காத
பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.