பொறையுடைமை
153இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

வறுமையிலும்    கொடிய   வறுமை; வந்த  விருந்தினரை   வரவேற்க
முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின்
செயலைப் பொறுத்துக் கொள்வது.