பொறையுடைமை
155ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

தமக்கு   இழைக்கப்படும்   தீமையைப்   பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார்   பொன்னாக   மதித்துப்     போற்றுவார்கள்.    பொறுத்துக்
கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.