பொறையுடைமை
156ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக்   கேடு  செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம்  எனப்
பொறுமை கடைப் பிடிப்போருக்கோ,  வாழ்நாள்  முழுதும்   புகழ்மிக்கதாக
அமையும்.