குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அழுக்காறாமை
161
ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய
நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.