வெஃகாமை
176அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருளை   விரும்பி  அதனை  அடைவதற்கான  வழியில் செல்பவன்
தவறிப்போய்ப்  பிறர்   பொருளை   விரும்பிப்   பொல்லாத    செயலில்
ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.