புறங்கூறாமை
182அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப்  பேசிவிட்டு
அவர்   இல்லாத   இடத்தில்   அவரைப்  பற்றிப் பொல்லாங்கு பேசுவது
அறவழியைப்   புறக்கணித்து  விட்டு,  அதற்கு  மாறான   காரியங்களைச்
செய்வதைவிடக் கொடுமையானது.