புறங்கூறாமை
186பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.

பிறர்மீது  ஒருவன்    புறங்கூறித்  திரிகிறான் என்றால் அவனது பழிச்
செயல்களை   ஆராய்ந்து  அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது
கூற நேரிடும்.