பயனில சொல்லாமை
193நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.

பயனற்றவைகளைப்பற்றி  ஒருவன்  விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே
அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.