தீவினையச்சம்
202தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்.

தீய  செயல்களால்  தீமையே  விளையும்  என்பதால் அச்செயல்களைத்
தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட  அஞ்சிட
வேண்டும்.