தீவினையச்சம்
207எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

ஒருவர்  நேரடியான  பகைக்குத்  தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்
செய்யும்  தீய  வினைகள்    பெரும்  பகையாகி  அவரைத்   தொடர்ந்து
வருத்திக்கொண்டே இருக்கும்.