ஒப்புரவறிதல்
214ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

ஒப்புரவை   அறிந்து  பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு  மாறானவன்
இறந்தவனே ஆவான்.