ஒப்புரவறிதல்
216பயன்மர முளளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.

ஈர  நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின்
நடுவே   செழித்து   வளர்ந்த   மரம்,   பழுத்துக்   குலுங்குவது  போல
எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.