ஒப்புரவறிதல்
219நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயனீர்மை
செய்யா தமைகலா வாறு.

பிறர்க்கு    உதவி      செய்வதையே    கடமையாகக்     கொண்ட
பெருந்தகையாளன்    ஒருவன், வறுமையடைந்து    விட்டான்   என்பதை
உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும்
நிலைமைதான்.