புகழ்
237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்.

உண்மையான   புகழுடன்   வாழ  முடியாதவர்கள் அதற்காகத் தம்மை
நொந்து   கொள்ள   வேண்டுமே  தவிரத்  தமது   செயல்களை இகழ்ந்து
பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?