புகழ்
238வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய  புகழைப்  பெறாவிட்டால்,  அது
அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.