அருளுடைமை
245அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலம் கரி.

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை  உணராமல்
கடமையாற்றலாம்  என்பதற்கு,  காற்றின்    இயக்கத்தினால் வலிமையுடன்
திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.