அருளுடைமை
248பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது.

பொருளை   இழந்தவர்  அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை
இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.