அருளுடைமை
250வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட    மெலிந்தவர்களைத்   துன்புறுத்த   நினைக்கும் போது,
தன்னைவிட    வலியவர்    முன்னால்  அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு
இருப்பதை மறந்துவிடக் கூடாது.