புலால் மறுத்தல்
252பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர்  என்னும்
சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும்  சிறப்பு
இல்லை.