கூடாவொழுக்கம்
277புறங்குன்றி கண்டனைய ரேனு மகம்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

வெளித் தோற்றத்துக்குத்  குன்றிமணி  போல்  சிவப்பாக  இருந்தாலும்,
குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம்  படைத்தவர்களும்   உலகில்
உண்டு.