நீத்தார் பெருமை
28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின்   பெருமையை, இந்த உலகில்  அழியாமல்  நிலைத்து
நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.