கள்ளாமை
288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர்
நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.