கள்ளாமை
290கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

களவாடுபவர்க்கு   உயிர்    வாழ்வதேகூடத்  தவறிப்போகும்; களவை
நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.