குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வாய்மை
293
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்.
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச்
சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.