வாய்மை
295மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை    பேசுகிறவர்கள்    தவமும்,
தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.