வாய்மை
299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின்  இருளைப்  போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப்
போக்கும்  பொய்யாமை  எனும்  விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக்
காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.