வெகுளாமை
305தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவன்   தன்னைத்தானே   காத்துக்   கொள்ள    வேண்டுமானால்,
சினத்தைக்    கைவிட    வேண்டும்.    இல்லையேல்   சினம்,  அவனை
அழித்துவிடும்.