வெகுளாமை
306சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னு
மேமப் புணையைச் சுடும்.

சினங்கொண்டவரை   அழிக்கக்   கூடியதாகச்   சின  மென்னும் தீயே
இருப்பதால்,  அது   அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி
போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.