வெகுளாமை
307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று.

நிலத்தைக்  கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது
போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.