குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெகுளாமை
310
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை
அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.