இன்னா செய்யாமை
314இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நமக்குத் தீங்கு செய்தவரைத்  தண்டிப்பதற்குச்   சரியான  வழி, அவர்
வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.