இன்னா செய்யாமை
315அறிவினா னாகுவ துண்டோ பிறிதுநோய்
தன்னோய்போற் போற்றாக் கடை.

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத்  தம்  துன்பம்  போலக்  கருதிக்
காப்பாற்ற   முனையாதவர்களுக்கு   அறிவு  இருந்தும்  அதனால்  எந்தப்
பயனுமில்லை.