இன்னா செய்யாமை
317எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானு
மாணாசெய் யாமை தலை.

எவ்வளவிலும்,   எப்பொழுதும்,  எவரையும்  இழிவுபடுத்தும்  செயலை
மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.