அறன்வலியுறுத்தல்.
32அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை
மறத்தலினூங் கில்லையாங் கேடு.

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய
வாழ்க்கைக்கு  ஆக்கம்  தரக்   கூடியது   எதுவுமில்லை; அந்த அறத்தை
மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.